Apple Stops Fat Loss

உடல் எடை குறைய, ஆப்பிள் சாப்பிடலாமா…?

நம்ம மக்கள் பல  பேர், அதிக உடல் எடையால  அவதிப்பட்டுட்டு இருக்காங்க. உடல் எடையை குறைக்க பல விதமான உடற்பயிற்சிகளையும் உணவு முறைகளையும் கடைபிடிச்சு தீவிரமாக முயற்சி பண்ணுறாங்க.

 அந்த வகையில, ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடிக்கிற பல பேரோட விருப்பமான உணவாக ஆப்பிள் பழம் இருக்குது. பெரும்பாலும், இவங்க எல்லாரும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுறத வழக்கமாக வெச்சிருப்பாங்க.

 ஆனா, அப்படி தினமும் ஆப்பிள் சாப்பிட்டா உடல் எடை  குறையாது. அது தான் உண்மை. எப்படி’னு  தெரியனுமா…? மேல படிங்க

 

 ஆப்பிளில்  இருப்பது என்ன…?

 பொதுவா, ஒரு ஆப்பிள் பழத்துல மாவுச்சத்து 25 கிராம் வரை இருக்கும். அந்த 25 கிராம்’ல  சர்க்கரை 19 கிராம் அளவுக்கு இருக்கும். அதாவது, கிட்டத்தட்ட ஒரு சாதாரணமான அளவுல இருக்கக்கூடிய ஆப்பிள் பழத்தில 20 கிராம் சர்க்கரை இருக்கு.

 இந்த அளவு சர்க்கரை உள்ள பொருளை சாப்பிட்டா, அது 1 இல்லனா 2 நாள் வரைக்கும், உடல் எடை குறைவதை தடுத்து நிறுத்திடும்.

மாவுச்சத்தை தவிர, நார்சத்து 4.4  கிராமும், ஒரு கிராம் நிறைவுற்ற  கொழுப்புக்களும் (Saturated Fats) இருக்கு. ஆப்பிள்’ல கொஞ்சம் கூட கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை என்பது கூடுதல் தகவல்.

 இதையெல்லாம் பார்த்தா, நிச்சயமா ஆப்பிள் சத்தான, ஆரோக்கியமான உணவு தான். ஆனா, எடை குறைப்புக்கு உதவாது’னு தெளிவா புரிஞ்சிக்கலாம்.

 

சர்க்கரை தான் பிரச்சனையா…?

 மேலோட்டமா பார்த்தா, சர்க்கரையும், மாவுச்சத்து உள்ள பொருட்களும் தான் பிரச்சனையா தெரியும். ஆனா, எடை குறைப்புக்கு முக்கிய எதிரியே இன்சுலின் தான்.

 இந்த இன்சுலின் நம்மளோட இரத்தத்துல  இருந்துச்சுன்னா, நம்ம உடம்பு, உடல் எடையை குறைக்க கூடிய செயல்பாடுகளை நிறுத்திடும்.

 சர்க்கரையும் ஒருவிதமான மாவுச்சத்து தான். மாவுச்சத்து அதிகமாக இருக்க உணவுகளை சாப்பிட்டதும், இரத்த சர்க்கரை அளவு  டக்குன்னு அதிகரிக்கும். இந்த இன்சுலினோட வேலையே, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துறது தான்.

 அதனால இரத்த சர்க்கரை அளவு அதிகரிச்சா,  நம்மளோட கணையம் இன்சுலினை சுரந்து இரத்தத்தில கலந்து விடும். அப்புறம், இந்த  இன்சுலின் நம்ம இரத்தத்தில் இருக்க வரைக்கும், எடையை குறைக்கக்கூடிய எந்த வேலையும்,  நம்ம உடம்புல நடக்காது.

 இதுல சிக்கலான விஷயம் என்னன்னா…? நீங்க, எந்த உணவை, எப்ப சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும்… இந்த இன்சுலின் அதற்கேத்த அளவுல சுரந்து, இரத்தத்துல கலக்கும்.

 
 எப்படி இதை தவிர்க்கலாம்…?

 ஏற்கனவே சொன்னது போல, நீங்க எப்போ என்ன சாப்பிட்டாலும் இன்சுலின் சுரக்கும். அதனால 3 வேளை உணவுகளை மட்டும் சாப்பிட்டு, நடுவுல இரத்த சர்க்கரைய அதிகரிக்கக் கூடிய எந்தப் பொருளையும் சாப்பிடாம தவிர்க்கணும்.

 இதனால இன்சுலின் சுரந்து, இரத்தத்தில் கலப்பது குறைஞ்சு, உடல் எடையை குறைக்க கூடிய செயல்பாடுகள், தடையில்லாம நடக்கும்.

 இது நடக்கணும்னா ஆப்பிள் மட்டும் இல்லங்க, சர்க்கரையோ மாவுச்சத்தோ உள்ள எந்த உணவையும், நீங்க சாப்பாட்டு நேரம் தவிர்த்து வேற நேரங்கள்’ல சாப்பிடக்கூடாது.

 உங்களுடைய 3 வேளை உணவுகளை கூட மாவுச்சத்தும் சர்க்கரையும் இல்லாத  உணவுகளாக சாப்பிட்டு வந்தா, இன்சுலின் அளவு தொடர்ந்து கம்மியாவே இருக்கும். இதனால உடல் எடை குறையும் வேகமும் அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart