காய்கறிகள் பற்றிய 8 பயனுள்ள குறிப்புகள்

தினமும் நம்ம உணவுல சேர்க்க வேண்டிய காய்கறிகள், நம்ம உடம்புக்கு பல அற்புதமான நன்மைகளை தருது. ஆனா, அந்த காய்கறிகளை கையாள வேண்டிய முறைகளை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டா, அது மூலமா கிடைக்குற பலன்களை அதிகரிச்சுக்கலாம்

அப்படிப்பட்ட சில குறிப்புகளை பத்தி தான் நாம இன்னைக்கு பார்க்க போறோம்.

குறிப்பு 1:- 

ஒரு வாரத்துக்கும் மேல காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில வைக்க போகிறீங்க அப்படின்னா… அதை உறைய (Freeze) வச்சு வைக்கணும்.

ஏன்னா, சாதாரணமான நிலையில அது நாள் கணக்குல இருந்தா, அதோட சத்துகளை நாம இழந்துடுவோம். உறைய வச்சு பதப்படுத்துனா, அந்த சத்துக்கள் வீணாகுறத தடுக்கலாம்.

குறிப்பு 2:-

3 கப் அளவு கோசு வகை காய்கறிகளை சாப்பிட்டா, சில வகை புற்றுநோய்கள் ஏற்படுறது 41% வரைக்கும்  குறையுறதா ஆய்வுகள் சொல்லுது. உண்மையிலேயே இது ரொம்ப பெரிய விஷயம். 

மத்த காய்கறிகளா இருந்தா, குறைஞ்சது 23 கப் அளவு சாப்பிட்டா மட்டும் தான், அந்த அளவுக்கு புற்றுநோய்க்கு எதிரா செயல்பட முடியும்.

அப்படின்னா, இந்த கோசு வகை காய்கறிகள், புற்றுநோய் வராம தடுக்குறதுல எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது’ன்னு உணர்ந்து, குறைஞ்சது 3 கப் ஆவது உணவுல சேர்த்துக்கங்க.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், பச்சை பூக்கோசு (Broccoli), பரட்டை கீரை போன்ற காய்கறிகளை தான், நாம கோசு வகை காய்கறிகள்’ன்னு சொல்றோம். 

குறிப்பு 3:-

முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயத்தின் வெளிப்புற தோள்கள்’ல அதிகளவு சத்துக்கள் இருக்கு. அதனால, அந்த தோல்களை உரிச்சு தூக்கி எறியாம பயன்படுத்தனும்.

குறிப்பு 4:-

பச்சை பூக்கோசு எனும் Broccoli‘ஐ  சமைக்கும் போது, அதோட இலைகளையும் சேர்த்துக்க மறந்துடாதீங்க. ஏன்னா, அந்த இலைகள்’ல அதிக சத்துக்கள் காணப்படுது.

குறிப்பு 5:-

காய்கறிகள் நீண்ட நேரம் வாடாம இருக்கணும்னா, அது மேல கொஞ்சம் தண்ணி தெளிக்கனும். இதனால, அந்த காய்கறிகள் ரொம்ப நேரம் வாடி போகாம இருக்கும்.

குறிப்பு  6:-

காய்கறிகளை செம்பு பாத்திரத்துல சமைக்கக்கூடாது. அப்படி சமைச்சா, அதுல இருக்க வைட்டமின் C மற்றும் வைட்டமின் D எல்லாம் போய்டும். அதுக்கு பதிலா எவர்சில்வர் மற்றும் கண்ணாடி பாத்திரங்கள்’ல தாராளமா சமைக்கலாம்.

குறிப்பு 7:-

காய்கறிகள் பொதுவா, அதிக வெயிலையோ மழையையோ கூட தாங்காது. அதை போய் நாம அதிக வெப்பத்துல சமைச்சா, அதோட ஒட்டுமொத்த சத்துக்களையும் ஈஸியா இழந்துடுவோம். 

அதனால, முடிஞ்ச வரைக்கும் குறைஞ்ச வெப்பத்துல, குறைஞ்ச நேரத்துல, காய்கறிகளை சமைச்சு இறக்கிடனும். அப்படி செஞ்சா மட்டும் தான், நமக்கு அதை சாப்பிடுறதால ஏற்படுற எல்லா நன்மைகளும் முழுசா கிடைக்கும்.

குறிப்பு 8:-

Canned  Vegetables’ன்னு விற்கப்படுற பதப்படுத்தப்பட்டு, கேன்’ல அடைக்கப்படுற காய்கறிகளை வாங்கி உபயோகிக்குறது, சென்னை மும்பை, பெங்களூரு மாதிரி பெரு நகரங்கள்’லயும், வெளிநாடுகள்’லயும் மட்டும் தான் அதிகமா இருக்குது.

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், அதிக வெப்பத்துல  பாச்சர் (Pasteurization) முறைக்கு உட்படுத்தப்படும். அதுக்கு அப்புறமா தான் கேன்கள்‘ல அடைக்கப்படும்.

இந்த செயல் முறையிலயே, மொத்த சத்துக்களையும் அந்த காய்கறிகள் இழந்துடும். அதனால, நீங்க இந்த மாதிரி காய்கறிகளை உபயோகிப்பவராக இருந்தா, இதுக்கு பதிலா Fermented Vegetables’ங்குற நொதிக்க வைக்கப்பட்ட காய்கறிகளை வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த குறிப்புகள் எல்லாமே உங்களுக்கு கண்டிப்பா பயன்படும்’னு நம்புறேன். மேற்கண்ட குறிப்புகளை கவனத்துல வச்சு, செயல்படுத்தி, காய்கறிகளை மேம்பட்ட முறையில கையாண்டு, பலன் பெறுங்க.

உங்களுக்கு நீங்களே ஆரோக்கியமான வாழ்க்கைய அமைச்சுக்க, எங்களால முடிஞ்ச பல நல்ல விஷயங்களையும், சரியான தகவல்களையும் உங்களுக்கு தொடர்ந்து சொல்லிகிட்டே இருப்போம். அது தான் எங்க நோக்கம். அதனால, தொடர்ந்து எங்களோட பதிவை படிச்சுட்டு வாங்க. அதோட, உங்க கருத்துக்களையும் தெரியப்படுத்த மறந்துடாதீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart